தங்களுடைய கைகளை தாங்களே வெட்டிக்கொள்ளும் மாணவர்கள்
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டிக்கொண்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டியுள்ளனர்.
பின்னர் குருதியினை கடதாசி மூலம் துடைத்துவிட்டு கிருமி தொற்று நீக்கி காயத்தின் மேல் வீசிறிக்கொண்டதாக நேரில் பார்த்த சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை குறித்த மாணவர்கள் சாதரணமாக செய்து கொள்வதாகவும், ஒருவருக்கு ஒருவர் பார்த்து வெட்டிக்கொண்டதன் மூலமே வெட்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் சக மாணவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, இவ்வாறான செயற்பாடுகள் ஒரு வித உளவியல் பிரச்சினையாக கூட இருக்கலாம் என தெரிவிக்கும் மருத்துவர்கள் மாணவர்களுடன் உரையாடி அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.