
தகவல் தொழில்நுட்ப கற்கைநெறிக்கு புலமைப்பரீட்சை வழங்கும் நிகழ்வு
-யாழ் நிருபர்-
யாழ். இந்திய உதவித்தூதரகத்தின் எற்பாட்டில் வடமாகாண பாடசாலைகள் மட்டத்தில் கற்றுவரும் மாணவர்களின் திறன் ஆற்றல் தகவல் தொழில்நுட்ப கற்கைநெறிக்கு புலமைப்பரீட்சை வழங்கும் நோக்கில் காசோலைகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று யாழில் உள்ள தனியார் விடுதியில் யாழ். இந்திய உதவித்தூதகரத்தின் பதவிநிலை அதிகாரி எஸ்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜ் கலந்துகொண்டார்.
வடமாகாணத்தில் உள்ள 13 கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைளில், 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் அதி திறமைச்சித்தி பெறுபேறுகளை மாகாண மட்டத்திலும், மாவட்ட ரீதியாகவும் பெற்றுக்கொண்டுக்கொண்ட 13 மாணவர்களுக்கு தலா 25,000 ரூபா வீதம் படி 3,25000 ரூபா காசோலைகளை வழங்கி வைக்கப்பட்டன.
இதில் வடமாகாண அமைச்சுக்களின் செயலகம், பணிப்பாளர்கள் அலுவலகம், மாவட்ட செயலகம் அரச தொழில்துறை திணைக்களம் கல்வி, சுகாதாரம் விளையாட்டு, விவசாயம் உள்ளிட்ட துறைசார்ந்த அரச அதிகாரிகளுக்கான இந்திய புலமைப்பரீட்சை தொடர்பாக கருத்தரங்கு இடம்பெற்று, இதில் புலமைப்பரீட்சை தொடர்பான ஆக்கபூர்வமான விளங்கங்களும் வழங்கப்பட்டது.
இந்திய புலமைப்பரீட்சைக்கு வடமாகாணத்தில் இருந்து எவரும் முக்கியத்துவம் காட்டாத நிலையினையும் அதனை அரச அதிகாரி தெளிவூட்டல்களை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலையினை தெளிவூட்டப்பட்டது.
இவ் நிகழ்வில் வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்
யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், உள்ளூராட்சிதிணைக்கள ஆணையாளர் பற்றிக்
நிரஞ்சன், யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் உள்ளிட்ட அரச திணைக்கள உயர் அதிகாரிகள் நிர்வாக திறன் அலுவலகர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்
எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்