டயர்களை எரித்தமையால் புதிய கார்ப்பட் வீதி சேதம்

பொகவந்தலாவை நகரில் டயர்களை எரித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், புதிதாக கார்பட் இடப்பட்டு புனரமைக்கப்பட்ட குறித்த வீதி சேதமடைந்துள்ளது என நோர்வூட் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நேற்று புதன்கிழமை டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்பின்னரே இவ்வாறு வீதி சேதமடைந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

பாரிய நிதி செலவில் ஒரு வருடத்துக்கு முன்னர், பொகவந்தலாவை வீதி புனரமைக்கப்பட்டதாகவும், நேற்றைய தினம் அங்கு டயர்கள் எரிக்கப்பட்டமையால் வெப்பத்தால் சேதமடைந்து போட்டப்பட்ட காபட் கழன்றுள்ளதாகவும் நோர்வூட் பிரதேச சபை தெரிவித்துள்ளது.