டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு முன்னால் முற்றுகையிட்ட மாணவர்கள்

-யாழ் நிருபர்-

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாணக்கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக பெரும்பான்மை மாணவர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இப் போராட்டம் இடம்பெற்று பரமேஷ் வசந்தி பலாலி வீதி வழியாக யாழ் நகரை வந்தடைந்தார்.

நகரை வலம் வந்து வீதிகளை மறித்து கோத்தபாய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு டக்ளஸ் தேவானந்தா அவர்களது அலுவலகத்திற்கு முன்னால் வந்தது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு முன்னால் முற்றுகையிட்ட போராட்டக் குழுவினர் கோத்தபாய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது அரசிற்கு எதிராக பதாகைகளை தாங்கியாறு போராட்டம் இடம்பெற்றது.