ஜப்பான் பிரதமர் மீது குண்டுவீச்சு தாக்குதல்

தென்மேற்கு ஜப்பானில் வயகமா என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட அந் நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா மீது  இன்று சனிக்கிழமை காலை கையெறி குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஒருவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இத் தாக்குதலில் பிரதமர் புமியோ கிஷிடா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

குண்டு வீசிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்