ஜப்பானில் வேலை வாய்ப்பு

சிறந்த தொழில் தகைமைகளை கொண்டவர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு வழங்கப்படும், என ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யொஷிமாசா ஹயாசி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 2023 ஆண்டில் சிறந்த தொழில் தகைமைகளை கொண்டவர்களுக்கு ஜப்பானில் பல்வேறு துறைகளிலும் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

அந்நிய செலாவணி பற்றாக்குறையினால் இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொஷிமாசா ஹயாசி மேலும் தெரிவித்தார்.

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்

எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group என்ற வட்டினை அழுத்தவும்

JOIN WHATSAPP GROUP