ஜப்பானில் மீண்டும் நில அதிர்வு

ஜப்பானில் இன்று வியாழக்கிழமை ரிக்டர் அளவுகோலில் 6.0 மெக்னிடியூட்டாக நில அதிர்வு பதிவாகியுள்ளது.

புகுசிமா பிராந்தியத்தில் 40 கிலோமீற்றர் ஆழத்தில், இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக ஜப்பானிய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தலைநகர் டோக்கியோவிலும் குறித்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

எனினும், நில அதிர்வையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.