ஜனாதிபதியுடன் இன்று சந்திக்கவுள்ள கட்சிகள்

11 கட்சிகளின் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வழங்கிய யோசனை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியினால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய இன்று  ஞாயிற்றுக்கிழமைமாலை 7 மணிக்கு குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஆளும் கூட்டணியின் பங்காளி கட்சிகள் காபந்து அரசாங்கம் ஒன்றுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.

இந்தநிலையில் இந்த விடயம் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.