ஜனாதிபதியின் மாளிகைக்கு அருகில் ஒருவர் தற்கொலை

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்வெட்டை உடனடியாக நிறுத்தக் கோரி, அந்த நபர் மின்மாற்றியில் ஏறி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவருகின்றது.

சம்பவத்தின் போது அவர் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.