ஜனாதிபதியின் தவறான முடிவுகளே மக்களின் துன்பத்துக்குக் காரணம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான முடிவுகள் காரணமாகவே 22 மில்லியன் மக்கள் துன்பங்களை அனுபவித்து வருவதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நோயை ஒழிக்கும் பொறுப்பை ஏற்று செயற்பட்டு வந்த கோவிட் 19 தடுப்பு ராஜாங்க அமைச்சராக பணியாற்றிய சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தற்போது அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள சுயாதீன அணியில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து வருகிறார்.

சிங்கள பத்திரிகை ஒன்று பேட்டியளித்துள்ள சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, தலைவலிக்கு தலையணை மாற்றுவது போல் புதிய அமைச்சரவையை நியமித்துள்ளதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது.

அனைத்து கட்சிகளும் இணைந்து இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கி இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.