சென்னை சுப்பர் கிங்ஸை 20 ஓட்டங்களால் வீழ்த்தியது டெல்லி கப்பிட்டல்ஸ்

17ஆவது இந்தியன் பிறீமியர் லீக்கின் 13ஆவது போட்டியில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸை 20 ஓட்டங்களால் டெல்லி கப்பிட்டல்ஸ் வெற்றி கொண்டது.

டெல்லி கப்பிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த டெல்லி கப்பிட்டல்ஸ், முன்வரிசை வீரர்களின் அதிரடிகளின் உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களைக் குவித்தது

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 20ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று 20 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.