குறைந்தபட்ச ஒருமணி ஊதியமாக 21 சுவிஸ் பிரங் – அறிமுகப்படுத்திய முதல் ஜெர்மன் மாநிலம்

சுவிட்சர்லாந்தில் குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்திய முதல் ஜெர்மன் மொழி பேசும் மாநிலமாக பாசல் நகரம்  ( Basel- Stadt) உள்ளது. எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் , ஒரு மணி வேலை நேரத்திற்கு குறைந்த பட்ச கொடுப்பனவாக 21 சுவிஸ் பிரங்குகள் வழங்கப்படவுள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்துவதற்கான உத்தரவை அரசாங்க கவுன்சிலர் காஸ்பர் சுட்டர் தெரிவித்துள்ளார்.

இந்த ஊதிய நடைமுறை பிரஞ்சு மொழி பேசும் மேற்கு சுவிஸ் மாநிலங்களான ஜூரா, ஜெனிவா மற்றும் நொசத்தல் மற்றும் இத்தாலிய மொழி பேசும் டிசினோவிலும் நடைமுறையில் உள்ளது.

குறைந்தபட்ச ஊதிய கொடுப்பனவானது எல்லை நாடுகளிலும் மற்றும் வெளிநாட்டில் இருந்து வேலைக்காக அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும் இது பொருந்தும்.