
சுற்றுலா மையம் வடக்கு ஆளுநரால் திறந்து வைப்பு
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சிக்குளத்தை அண்டிய பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இன்று புதன்கிழமை காலை வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சுற்றுலா மையத்தை திறந்து வைத்தார்.
கிளிநொச்சி குளத்தின் கீழ்ப்புறமாக உள்ள கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் உருவாக்கப்பட்ட சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முகமாக கிளிநொச்சி குளத்தினுள் விசைப் படகு துடுப்பு படகு ஆகிய பொழுதுபோக்கு சேவைகள் மற்றும் பாரம்பரிய உணவுகள் இயற்கை குளிர்பானங்கள் என்பனவும் சிறுவர்களுக்கு ஏற்ற விளையாட்டுகள் போன்றவை குறித்த சுற்றுலா மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் வடக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால், கரைச்சி பிரதேச செயலாளர் முகுந்தன், வைத்தியர்கள், அரச அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.