
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல்
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் சிக்கல் நிலவுவதாக நாசா தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் “க்ரூ” 10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டால் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 4.56ற்கு விண்கலம் விண்ணில் செலுத்தப்பட வாய்ப்புள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
ஏவுதளத்தில் இருந்த இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் இந்த தாமதம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.