சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் : நோயாளர்களுக்கு உதவும் இராணுவத்தினர்

-பதுளை நிருபர்-

சுகாதார ஊழியர்களால் இன்று வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில்,  இன்று பதுளை பொது வைத்தியசாலைகளுக்கு உதவிகளை வழங்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்

சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் உட்பட அனைத்து சுகாதார பணியாளர்களும் 35,000 ரூபா கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.