சுகயீன விடுமுறை போராட்டம் வெற்றி – ஜோசப் ஸ்டாலின்
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று திங்கட்கிழமை முன்னெடுத்த சுகயீன விடுமுறை போராட்டம் வெற்றிகரமாக அமைந்ததாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பில் , இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்
அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெருக்கடி நிலைக்கு தீர்வு கோரியும் ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் உள்ளிட்டோர் இன்று இவ்வாறு போராட்டத்தை ஈடுபட்டிருந்தனர்.
இதன் காரணமாக இன்று பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன. ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வருகை தராமையினால் பல பாடசாலைகளின் மாணவர்கள் மீண்டும் வீட்டுக்கு திருப்பி அனுப்பபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 28ஆம் திகதி பல அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.