சிவனொளிபாத மலைக்கு பின்னால் சூரிய உதயம் : வைரலாகும் புகைபடம்

கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து சிவனொளிபாத மலைக்கு பின்னால் சூரியன் உதிக்கும் அழகிய காட்சியை புகைப்படப்பிடிப்பாளர் ஒருவர் தனது கமெராவில் மிகவும் தத்ரூபமாக எடுத்துள்ளார்.

இந்த அழகிய தருணத்தை லக்ஷ்மணன் நடராஜா என்ற புகைப்படப்பிடிப்பாளரால் நேற்று வெள்ளிக்கிழமை பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.