சிறையில் பெண்கள் கைதிகள் கர்ப்பமாவதால் பரபரப்பு

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் சிறையில் இருக்கும் பெண் கைதிகள் கர்ப்பமாகி வருவதை அடுத்து ஆண் சிறை ஊழியர்கள் பெண் கைதிகள் இருக்கும் பகுதியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் சிறைச்சாலையில் சோதனை செய்தபோது பெண் கைதிகள் அதிக அளவில் கர்ப்பம் தரித்திருந்தமை தெரியவந்துள்ளது.

இதேவேளை மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பல சிறைகளில் 196 குழந்தைகள் சிறையில் பிறந்து காவலில் வளர்ந்து வருவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெண் கைதிகள் இருக்கும் பகுதிக்கு ஆண் சிறைச்சாலை ஊழியர்கள் நுழைவதற்கு தடை செய்ய வேண்டும் என மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் அன்றைய தினம் அதிரடி உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.