சிறைச்சாலையில் காதலியின் கரம் பிடித்தார் ஜூ லியன் அசேஞ்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூ லியன் அசேஞ் தனது நீண்ட கால காதலியான ஸ்டெல்லா மோரிஸை தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் திருமணம் செய்துகொண்டார்.

2019ஆம் ஆண்டு முதல் தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 50 வயதான ஜூலியன் அசேஞ், சிறைச்சாலையில் கைதிகளை பார்வையாளர்கள் பார் வையிடும் நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்தார்.

சிறைச்சாலையில் நடந்த திருமணத்தில் 4 விருந்தினர்கள் மற்றும் இரண்டு சாட்சிகள் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டதாக அசேஞ்சின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.