சிறைச்சாலைகளில் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளில் நூற்றுக்கு 65 சதவீதமானவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் என்று சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 1000 – 1,500 வரையிலான சிறுவர்கள் சிறைச்சாலைகளில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலி, நாகொட பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.