சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு – 35 வயது பெண் கைது

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 35 வயது பெண்ணை பொலிசார் கைது செய்துள்ள சம்பவமானது ஆவனிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை – சிவகங்கை மாவட்டம் கீழச்சேவல்பட்டி அருகேவுள்ள ஆவனிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண் , இவருடைய வீட்டிற்கு அருகே வசித்து வந்த 13 வயது சிறுவனுக்கு தினமும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து , அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் கீழச்சேவல்பட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

முறைப்பாடை அடுத்து கைது செய்யப்பட்ட பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது . சிறுவனிடம் பொலிசார் சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றத்தில் பெண் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும் ,1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இவர் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.