சிறுமி ஆயிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியது : கொலையாளி சிறுமியின் உறவினர்

சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை – அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஆயிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

இந் நிலையில், குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், குறித்த நபர் உயிரிழந்த சிறுமியின் உறவினர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.