சாரதி கொலை ; மாணவன் கைது
வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகேவின் சாரதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிவிட்டு பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் 19 வயதுடைய மாணவனே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
கொலை இடம்பெற்ற அன்று இந்த மாணவனும் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்துக்கு வந்திருந்ததாகவும், கொலை சம்பவத்தோடு இவருக்கும் தொடர்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இக்கொலை சம்பவத்துடன் இந்த மாணவனின் தாய், தந்தை உள்ளிட்ட ஐவர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.