சாய்ந்தமருதில் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

-கல்முனை நிருபர்-

சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது.

நடப்பு சம்பியன் என்பதால் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்று, சாய்ந்தமருது ஹோலி ஹீரோஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்தாடி பிளாஸ்டர் விளையாட்டுக்கழக வீரர் அப்லால் காரியப்பரின் அபார அதிரடியாட்டத்தினால் வெற்றியடைந்து இறுதிப்போட்டியில் சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத்துடன் மோதி அதிலும் ஓர் இலகு வெற்றியை பதிவு செய்து 2022 சம்பியனாக மகுடத்தை சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சூடிக்கொண்டது.