சாந்தனின் இறுதி கடிதம்

இன்று காலை காலமான சாந்தன் எனும் சுதேந்திரராஜா இறுதியாக எழுதிய கடிதம் என்று அவருடைய கையெழுத்துடனான கடிதம் ஒன்றை கொடுந்தமிழன் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த யாழ்ப்பாணம் – உடுப்பிட்டியைச் சேர்ந்த சாந்தன் இன்று புதன்கிழமை காலை காலமான நிலையில், பிரேத பரிசோதனைகள் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சாந்தனின் உடலை எதிர்வரும் இரண்டு தினங்களில் இலங்கைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சாந்தன் தரப்பு சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சாந்தனின் உடலை காண்பதற்காக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாந்தன் கடந்த ஜனவரி 24ஆம் திகதி உடல் நல குறைவால் திருச்சி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிந்தார்.

தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்கான சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.