சாதனை படைத்த சப்பாத்து

பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில்  சென்சார்  தொழில் நுட்பம் பொருத்தப்பட்ட  சப்பாத்தினை அசாமை சேர்ந்த சிறுவனொருவன் வடிவமைத்துச் சாதனை படைத்துள்ளான்.

கரிம்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த அன்குரித் கர்மாகர் என்ற சிறுவனே குறித்த சப்பாத்தினைத் தாயாரித்துள்ளான்.

9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் அச்சிறுவன் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் ” கண்பார்வையற்றவர்கள் இச்சப்பாத்தினை அணிந்து செல்லும் போது எதிரே வரும் தடைகளை சென்சார் கண்டறிந்து அதிக சத்தத்துடன் அவர்களுக்கு  சமிக்ஞை செய்யும்” என்றான்.

மேலும் ”எதிர் காலத்தில் சிறந்த விஞ்ஞானியாக உருவாக வேண்டும் என்பதே தனது ஆசை” எனவும் அவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.