சவப்பெட்டியை வைத்து அழுது ஒப்பாரியுடன் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம்

-நுவரெலியா நிருபர்-

அதிகரித்து விலையுயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆட்சியாளர்கள் வெளியேற கோரியும், பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் கடந்த சில தினங்களாக நாட்டில் இடம்பெற்று வருகின்றன.

மலையகப்பகுதியில் நேற்றும் இன்றும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் கொட்டகலை நகரில் அதிகரிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களில் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று கொட்டகலை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சவப்பெட்டியினை வைத்து அதிகரித்து விலையினை கூறி ஒப்பாரி வைத்து தப்படித்து அழுது நினைவு கூர்ந்ததுடன் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் ஒழிய வேண்டும் எனவும் கோசமிட்டனர்.

அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டகாரர்கள் சவப்பெட்டியினை சுமந்த வண்ணம் நாட்டின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஒழிய வேண்டும் என கோசமிட்டவாறு கொட்டகலை டிரேட்டன் ஆலயத்திற்கு அருகாமையிலிருந்து கொட்டகலை  புகையிரத கடவை வரை வருகை தந்து அதனை தொடர்ந்து கலைந்து சென்றனர்.