சற்றுமுன் விபத்து : சிறுவன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

தாயும் மகனும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து யாழ்ப்பாணம் சத்திரச் சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

லொறியின் சில்லு சிறுவனின் தலையில் ஏறியதால் சிறுவன் சம்பவம் இடத்தில் உயிரிழந்துள்ளான்.

சம்பவ இடத்தில் ஒன்று கூடியவர்கள் லொறியின் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.