சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் நோக்குநிலை திட்டம்

 

-சம்மாந்துறை நிருபர் ABM.ஷிஹாப் ஆகில்-

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் 2024ம் ஆண்டு சேர்த்துக்கொள்ளப்பட்ட விவசாய உயர் தேசிய டிப்ளோமா உற்பத்தி தொழில்நுட்பவியல் பாடநெறிக்குரிய மாணவர்களுக்கான நோக்குநிலை திட்டம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு (Orientation Program) கல்லூரியின் அதிபர் S.தியாகராஜா மற்றும் Agriculture & Trade section பகுதித்தலைவர் K.வரகுனராகவன் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக திறன் மேம்பாட்டு அதிகாரி SHM.இர்பான் மௌலானா இனை கொண்டு இடம்பெற்றது.