சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரி : புதிய மாணவர்களை சந்தித்து உரையாடிய சிரேஸ்ட மாணவர்கள்

-சம்மாந்துறை நிருபர் சியாப் ஆக்கில்-

சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் தெரிவு செய்யப்பட்ட விவசாய டிப்ளோமா 2024 கல்வியாண்டு மாணவர்களை இன்று திங்கட்கிழமை பிற்பகல் சிரேஸ்ட மாணவர்கள் சந்தித்து அறிவுரை கூறினர்.

ஒழுக்கம், வரவு, பாடங்கள், விரிவுரை, செய்முறை தொடர்பாக விளக்கமளித்தனர். மாணவர்களின் ஆங்கில அறிவையும் பல வழிகளில் பரிசீலனை செய்தனர்.

இது ஒரு வரவேற்கத்தக்க முறைமை என மாணவர்கள் தெரிவித்தனர்.

இம்முறைமையை தாங்கள் விரும்புவதாகவும் இன்றுதான் வெளிச்சம் கிடைத்ததுபோல் உள்ளது என மாணவர்கள் தெரிவித்தனர்.