சத்திரச் சிகிச்சை அறையில் போட்டோ ஷூட் நடாத்திய வைத்தியர்

இந்தியாவில் சத்திரச் சிகிச்சை அறையில் போட்டோ ஷூட் நடத்திய வைத்தியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பரமசாகர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வரும் மருத்துவர் அபிஷேக் என்பவர் இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்எடுக்க முடிவு செய்துள்ளார்.

வழக்கமாக பூங்கா, கடற்கரை அல்லது அடர்ந்த காட்டில் போட்டோ ஷூட் நடத்தப்படும் நிலையில், இந்த ஜோடி வித்தியசமாக அரசு மருத்துவமனை சத்திரச் சிகிச்சை அறையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளது.

இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. எனினும் அரசு மருத்துவமனையின் சத்திரச் சிகிச்சை அறையை தவறாக பயன்படுத்தியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சத்திரச் சிகிச்சை அறையில் போட்டோ ஷூட் நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட சுகாதார அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த வைத்தியர் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.