கோழி இறைச்சி விலையில் மாற்றம்?

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு கிலோ கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு வழங்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் கொழும்பில் நேற்று புதன் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கால்நடை தீவனத்திற்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களும் மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் தொடர்ந்தும் முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.