
கோறளைப்பற்றில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வு
-கிரான் நிருபர்-
கோறளைப்பற்று பிரதேச செயலகமும் பெண்களுக்காக குரல் கொடுக்கும் வலையமைப்பும் இணைந்து நடத்தும் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
கோறளைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் “பெண்களை சாதனையாளராக மாற்றுவோம்” எனும் தொனி பொருளில் இடம் பெற்ற நிகழ்வில் சிறுவர்களின் நடனம், பெண்களினால் குடும்ப வன்முறையை மாற்றும் குடிப்பழக்கத்தினால் ஏற்படும் குடும்ப வறுமையை சித்தரிக்கும் நாடகம் இடம் பெற்றதுடன் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் கோறளைப்பற்று பிரிவுக்குட்பட்ட 12 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி பெண்களுக்காக குரல் கொடுக்கும் எனும் வலையமைப்பும் தொடங்கப்பட்டதுடன், அவ் வலையமைப்பினால் குறித்த பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் தேவைப்பாடுகளை உள்ளடக்கிய விண்ணப்பம் அரசாங்க அதிபரிடமும் பிரதேச செயலாளரிடமும் ஒப்படைக்கப்பட்டது .
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு மகளிரின் பங்களிப்பு அவசியம் என்றும் பெண்கள் பல துறைகளில் முன்னேறி கொண்டு உள்ளார்கள் நான் பொதுவாக உரிமைகள், சமத்துவம் தொடர்பாக கதைக்க மாட்டேன் கேட்டாலும் அது கிடைக்காது நாங்களாகவே முன்னோக்கி அதை உடைத்துக் கொண்டு முன்வர வேண்டும் நினைத்தால் அதை சாதிக்க முடியும் என கூறி சென்றார்.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டீனா யுலேக்கா முரளீதரன் மற்றும் எஸ்க்ஸ்கோ பணிப்பாளர், கிஸ் ஸ்கூப் செயற்திட்ட உத்தியோகஸ்தர், கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர்m பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், பதவிநிலை உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், கல்குடா, வாழைச்சேனை பொலிஸ் மகளிர் பிரிவு உத்தியோகஸ்தர்கள் மகளிர் சங்கங்கள், மகளிர் அமைப்புக்கள் என கலந்து கொண்டதுடன் பெண் சுயதொழில் முயற்சியாளர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களும் விற்பனை செய்யப்பட்டது.