Sri Lanka Tamil News Site

கோதுமை மா விலை வெகுவாக அதிகரிப்பு

- Advertisement -

சந்தையில் மீண்டும் கோதுமை மா விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ கோதுமை மா கடந்த வாரம் 180 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் தற்போதைய விலை 210 தொடக்கம் 220 ரூபா வரை அதிகரித்துள்ளது.

- Advertisement -

கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களில் ஒன்று கோதுமை மா விநியோகத்தை நிறுத்தியுள்ள நிலையில், இந்த வாரம் மீண்டும் கோதுமை மா விலை அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள் குறிப்பிட்டனர்.

கோதுமை மாவிற்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ள நிலையில், வெளி மாவட்ட சந்தைகளில் பல்வேறு விலைகளில் கோதுமை மா விற்பனை செய்யப்படுவதை காண முடிந்தது.
மலையகப் பகுதிகளில் அதிக விலைக்கு கோதுமை மா விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

- Advertisement -