‘கோட்டா கோ கம’ கிராமம் அப்புறப்படுத்தப்பட்டதால் பதற்றம்

காலியில் நிறுவப்பட்டிருந்த ‘கோட்டா கோ கம’ கிராமம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன.

காலிமுகத்திடலில், ‘கோட்டா கோ கம’ கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில், ‘கோட்டா கோ கம’ காலி கிளை நிறுவப்பட்டுள்ளது. அங்கும் கூடாரம் அமைத்து போராட்டத்தில் பலரும் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், அங்குச் சென்ற பொலிஸார், தற்காலிக கூடாரத்தை அகற்றியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.