கொழும்பு பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் தகவல்

நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் அதிக மக்கள் தொகை கொண்ட கொழும்பில் பாடசாலை செல்லும் சிறுவர்கள் அதிக வீதி விபத்துக்களை எதிர்கொள்கின்றனர் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

‘பாடசாலை வீதி பாதுகாப்பு கழகம்’ என்ற பெயரில் உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சு ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் இதில் பெரும்பாலான வாகன விபத்துக்கள் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் நிகழ்வதாகவும் அவர் இதன் போது சுட்டிகாட்டியுள்ளார்.