கொழும்பில் பீதியில் மக்கள் அதிகளவிலான பொருட்கள் கொள்பனவு

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இன்று வெள்ளிக்கிழமை பேலியகொடவில் உள்ள மானிங் சந்தையில் மக்கள் பீதியுடன் பொருட்களை வாங்குதல் பதிவாகியுள்ளது.

இன்று காலை வேளையில் சந்தையில் மரக்கறிகளை கொள்வனவு செய்வதில் பீதி காணப்பட்டதாகவும், பிற்பகல் வேளையில் நிலைமை சீரடைந்ததாகவும் மானிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் சமிந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வன்முறைச் சம்பவங்கள் மற்றும் ஊரடங்குச் சட்டம் இடம்பெறலாம் என அஞ்சி மக்கள் அத்தியாவசிய காய்கறிகளை கொள்வனவு செய்யும் நிலைமையை நாம் இன்று காணக்கூடியதாக இருந்தது என பீரிஸ் தெரிவித்தார்.

இருப்பினும், செப்டம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை சந்தை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்ட அறிவிப்பும் ஓரளவுக்கு அதிக அளவில் வாங்குவதற்கு பங்களித்தது. ஞாயிற்றுக்கிழமை சந்தையை மூட முடிவு செய்யப்பட்டது . தேர்தல் தொடர்பான வேலைகளில் மக்கள் அதிக ஈடுபாடு காட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களின் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை விட ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறலாம், என்ற அச்சமே காரணம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

போயா நாட்களில் மட்டுமே சந்தை மூடப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட மக்கள் அதிகளவில் காய்கறிகளை வாங்குகின்றனர். தேர்தல் குறித்து மக்கள் கவலைப்பட்டதால், இந்த வார இறுதியில் சந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்ததால், இன்று அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டதைக் கண்டோம் ஜனாதிபதி தேர்தல் பீதி வாங்குவதற்கு அதிக அளவில் பங்களித்தது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.