கொரோனா தொற்று : 403 மில்லியன் மாணவர்கள் பாதிப்பு
கொரோனா தொற்றுக் காரணமாக 403 மில்லியன் மாணவர்களுடன் 23 நாடுகளில் பாடசாலைகள் தொடர்ந்து பகுதி அளவு அல்லது முழுமையாக மூடப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.
147 மில்லியன் சிறுவர்கள் தாம் நேடியாகக் கற்கும் பாடசாலைக் கல்வியில் குறைந்தது பாதியை இழந்திருப்பதாக யுனிசெப் தொண்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சில பாதிக்கப்படக்கூடிய சிறுவர்கள், குறிப்பாக பெண்கள் மீண்டும் பாடசாலை திறக்கப்பட்ட நிலையில் பாடசாலைக்கு திரும்பவில்லை.
கொரோன வைரஸின் மிக மோசமான சுகாதார பாதிப்பில் இருந்து குறைவான பாதிப்பை சந்தித்த சிறுவர்கள் பெருந்தொற்றில் பாடசாலைகள் மூடப்பட்டதால் அவர்களது வாழ்வு தலைகீழாக மாறியுள்ளது.
2020 மார்ச்சில் உலகெங்கும் 150 நாடுகளில் பாடசாலைகள் முழுமையாக மூடப்பட்டதோடு மேலும் 10 நாடுகளில் பகுதி அளவு மூடப்பட்டன.