கொத்து மற்றும் ப்ரைட்றைஸ் ஆகியவற்றின் விலை குறைப்பு

கொத்து மற்றும் ப்ரைட்றைஸ் ஆகியவற்றின் விலை குறைப்பு

இலங்கையில் அண்மையில் எரிவாயு விலை குறைக்கப்பட்டதற்கு ஏற்ப சில உணவுப் பொருட்களின் விலைகளில் திருத்தம் செய்ய அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் சோற்று பொதி,  கொத்து மற்றும் ப்ரைட்றைஸ் ஆகியவற்றின் விலை 20 வீதத்தால் குறைக்கப்படும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

சாதாரண தேநீர் கோப்பை ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 30 ரூபாய் எனவும், பால் தேநீர் ஒரு கோப்பையின் விலை 90 ரூபாய் எனவும் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்