கைது செய்யப்பட்ட 53 பேரும் நீதிமன்றில் ஆஜர்

நுகேகொடை – மிரிஹான, பிங்கிரிவத்த பகுதியில் நேற்றிரவு எதிர்ப்பில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 53 பேரும் கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை ஆஜர்படுத்தப்பட்டனர்.

இரண்டு பஸ்களில் அவர்கள் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்தில், நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்தவர்கள் சந்தேகநபர்களை கை தட்டி வரவேற்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.