கேகாலை பொலிஸ் வலயத்திற்கு புதிய பொறுப்பதிகாரி நியமனம்

கேகாலை வலய பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ஜீ.ஆர்.கந்தேவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக இவர் கேகாலை வலய மேலதிக பொறுப்பதிகாரியாக செயற்பட்டிருந்தார்.

இதேவேளை, பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய உதவிப் பொலிஸ் அதிகாரி பீ.எம்.எஸ்.பீ.நவரத்ன கேகாலை பொலிஸ் வலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்