குழந்தைக்கு எமனான தாய்ப்பால்
யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக மூன்று மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் போது குழந்தையின் உடல் விறைப்பு ஏற்பட்டு உடல் நீல நிறமாக மாறியுள்ளதாகவும் பின்னர் குறித்த குழந்தை வட்டுக்கோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வட்டுக்கோட்டை வைத்தியசாலையின் வைத்தியர் ஏ.ஜெயபாலசிங்கம் குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ததோடு அது தொடர்பான வைத்திய அறிக்கையில் குழந்தையின் இறப்புக்கு நீர்ச்சத்து குறைபாடே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.