குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு
கம்பஹா – கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிதிரிகல அணைக்கட்டுக்கு அருகில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 75 வயதுடைய நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
குளவி கொட்டுக்கு உள்ளான நபர் வத்துபிட்டியல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.