குடும்ப அட்டை, உணவகங்களுக்கான அனுமதிப்பத்திரம் உள்ளவர்களுக்கு மாத்திரமே சமையல் எரிவாயு
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி மாவட்டத்தில் குடும்ப அட்டை, உணவகங்களுக்கான அனுமதிப்பத்திரம் ஆகியவை உள்ளவர்களுக்கு மாத்திரமே சமையல் எரிவாயு வழங்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அதிகாலை 3.00 மணிக்கு வருகை தந்தால் சமையல் எரிவாயுவினை பெறமுடிந்தது எனவும் தெரிவித்தனர்.
இன்று வெள்ளிக்கிமை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு விநியோக நிலையத்தின் முன்பாக காத்திருந்த பலர் சமையல் எரிவாயுவினை பெற்றுக் கொள்ள முடியாமல் திரும்பிசென்றமை குறிப்பிடத்தக்கது.