கிழக்கே நிலவும் குறைந்த வளிமண்டல தாழ் அமுக்கம் – வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் கிழக்கே நிலவும் குறைந்த வளிமண்டல தாழ் அமுக்கம் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை வரை மழையுடனான கூடிய வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். வேறு சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு பூராகவும் இன்று வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணி வரை இடியுடன் கூடிய கடுமையான வானிலை நிலவுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சூரியனின் வெளிப்படையான வடக்கு நோக்கிய சார்பு இயக்கத்தில், அது இந்த ஆண்டு ஏப்ரல் 05 முதல் 15 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேராக இருக்கப் போகிறது.

சிலாபம், மஹாகெலிய, வெலிவிட்ட (மாத்தளை மாவட்டம்), புல்லுமலை, கல்குடா மற்றும் குருக்கள்மடம் ஆகிய பகுதிகளில் இன்று நண்பகல் 12:12 மணியளவில் சூரியன் மேல்நோக்கி சென்றுள்ளதாக என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.