கிழக்கு மாகாண முஸ்லீம் பாடசாலைகளுக்கு விடுமுறை!

 

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிற கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுதினம் (26/27) ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படுவதற்கான அனுமதியை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஐயந்தலால் ரத்னசேகர வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

க.பொ.த (உ/த) பரீட்சை நிலையங்களாக அமையாத அனைத்து முஸ்லீம் பாடசாலைகளும் நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை மறுதினம் புதன்கிழமை ஆகிய இரு தினங்களுக்கும் விடுமுறை வழங்கப்படுகின்றது என்பதை அறியத்தருகின்றேன்.

பரீட்சை நிலையங்களாக அமையாத கிழக்கு மாகாண முஸ்லீம் பாடசாலைகளுக்கான 3ம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தும் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும்.

கிழக்கு மாகாணத்திலுள்ள 3ம் தவணை கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லீம் பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கு ஏற்படக் கூடிய அசெளகரியங்களை தவிர்ப்பதற்காகவே இவ்விடுமுறை வழங்கப்படுகின்றது என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.