
கிழக்கு மாகாண ஆளுனர் சம்மாந்துறை தொழில் நுட்பக்கல்லூரிக்கு விஜயம்
கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் சம்மாந்துறை தொழில் நுட்பக்கல்லூரிக்கு நேற்று வியாழக்கிழமை தீடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
சம்மாந்துறை தொழில் நுட்பக்கல்லூரியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விவசாயம் உட்பட அனைத்து வகையான சிறப்பான செயற்பாடுகளை முகநூல் பதிவுகளாக அறிந்து கொண்ட ஆளுனரின் இணைப்பாளர சுலைமான் நாசிறூனின் வேண்டுகோளுக்கு இணங்க விவசாய நடவடிக்கைகளை பார்வையிடவே ஆளுனரின் விஜயம் அமைந்திருந்தது.
ஆளுனரின் நேற்றைய விஜயத்தின் போது , விவசாய பாடநெறியை மட்டம் 7 வரை உயர்த்துவதற்கான கோரிக்கை அடங்கிய ஜனாதிபதிக்கான மகஜர் ஆளுனரிடம் கையளிக்கப்பட்டது.
தமது கோரிக்கை அடங்கிய மகஜரை விவசாய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் மொகமட் அஸ்பாக், பிரதித்தலைவர் இன்சாமுல்ஹக் ஆகியோரால் ஆளுனரிடம் கையளிக்கப்பட்டது.