கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வவுணதீவு வீதி திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வீதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது.

140 மில்லியன் ரூபா செலவில் இந்த வீதி நிர்மாணிக்கப்பட்டு பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, காணி அபிவிருத்தி, திறன் விருத்தி, மகளிர் அபிவிருத்தி, நீர் விநியோகத் துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி மூ.கோபாலரத்தினம் உட்பட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.