கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் ரத்து
கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் ரத்து செய்யப்பட்டதை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தன்னிடம் தெரிவித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிராத்தித்தலைவரும்இ பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இதன்போது அம்பாறை மாவட்ட கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோவில் போன்ற கல்வி வலயங்களிலிருந்து வினைத்திறன் மிக்க 400 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் முறையான பதிலீடுகளின்றி ஏனைய மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதனால் அம்பாறை மாவட்ட கல்வி பின்னோக்கி செல்லும் அபாயம் உள்ளத்துடன் மாணவர்களின் கல்விநிலை சீரழியும் ஆபத்தும் உள்ளதை ஜனாதிபதி செயலாளருக்கும் ஆளுநருக்கும் நான் நேற்று விளக்கிய விடயத்தை ஆளுநர் ஆராய்ந்ததாகவும் இவ்வாறான தவறுகல் இனி நடக்காது பார்த்துக்கொள்ள மாகாண கல்விப்பணிப்பாளரை தான் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் என்னிடம் தெரிவித்தார்.
என்றும் இந்த இடமாற்ற விடயத்தில் கரிசனை செலுத்திய இடமாற்றத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.