கிழக்கு மாகாணத்திற்கு புதிய கல்விப் பணிப்பாளர் நியமனம்!

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக,  கடமை நிறைவேற்று அடிப்படையில் (Cover up Duty) அம்பாறை வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ் ஆர் ஹசந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட நிலை அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதுவரை கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக பணியாற்றிய திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் கல்வி வெளியீட்டு திணைக்களத்திற்கு பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ளார்.

அதனைத்தொடர்ந்து சேவை மூப்பு அடிப்படையில் திருமதி.ஹசந்தி   கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக,  கடமை நிறைவேற்று அடிப்படையில்  தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார்